sachin

சதத்தில் சதம் அடித்து சாதித்தார் சச்சின் ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியது





மிர்புர்: நூறாவது சதம் அடிப்பாரா , எப்போது அடிப்பார் என அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று வங்கதேசத்தில் நிறைவேறியது. இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், மிர்புரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்தித்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஓப்பனில் இறங்கிய சச்சின் இன்று நிதானமாக ஆடினார். 43.3 வது ஓவரில் 138 பந்துகளில் சதம் அடித்தார். சச்சின் 147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பிரதமர்- மோடி வாழ்த்து :
சச்சின் சாதனை : பிரதமர் மன்மோகன்சிங், விளையாட்டு துறை அமைச்சர் அஜய்மாக்கான், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை சச்சினுக்கு தெரிவித்துள்ளனர், வரலாற்று சாதனை நிகழத்தியுள்ளார் என்று மோடியும், இந்த சாதனையை யாரும் நிகழ்த்திட முடியாது, இதன் மூலம் நாங்கள் பெருமை படுகிறோம் என்று அஜய்மாக்கானும் புகழ்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதங்கள் எடுத்த சச்சின் :வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 100வது சதத்தை அடித்த சச்சின், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 20 சதங்கள் (டெஸ்ட்-11, ஒரு நாள்-9) அடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 சதங்கள் ( டெஸ்ட்-2, ஒரு நாள்-5), இலங்கை அணிக்கு எதிராக 17 சதங்கள் ( டெஸ்ட்-9, ஒரு நாள்-8) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 7 சதங்கள் ( டெஸ்ட்-3, ஒரு நாள்-4), ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 8 சதங்கள் (டெஸ்ட்-3, ஒரு நாள்-5), இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 சதங்கள் ( டெஸ்ட்-7 , ஒரு நாள் 2),நியூசிலாந்து அணிக்கு எதிராக 9 சதங்கள் ( டெஸ்ட்-4., ஒரு நாள்-5) தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 12 சதங்கள் ( டெஸ்ட்-7, ஒரு நாள்-5) வங்கதேச அணிக்கு எதிராக 6 சதங்கள் (டெஸ்ட்-5, ஒரு நாள்-2) கென்யா அணிக்கு எதிராக 4 சதமும் ( ஒரு நாள்), நமீபியா அணிக்கு எதிராக ஒரு சதமும்( ஒரு நாள் போட்டி) எடுத்துள்ளார். சச்சின் தனது நூறாவது சதத்தை எடுக்க ஒராண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் சாதனைகள் ஒருநாள் போட்டிகள்:
49 சதங்களை அடித்தவர்

95 அரை சதம் அடித்தவர்

18 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர்

200 ரன் எடுத்த முதல் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 20 சதம் எடுத்துள்ளார்.

ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் என 7 முறை எடுத்த முதல் வீரர்

5 முறை 150 ரன்களைக் கட்நதிருக்கிறார்

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிராக 3 ஆயிரம் ரன் எடுத்தவர்

442 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

தெசடர்ச்சியாக 185 போட்டிகளில் ஆடி உள்ளார்.

90க்கும் மேற்பட்ட மைதானங்களில் விளையாடி இருக்கிறார்.

62 முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்

15 முறை தொடர் நாயகன் விருது பெற்றவர்

உலக கோப்பை போட்டிகள்

6 சதம் அடித்தவர்

2 ஆயிரத்து 120 ரன் எடுத்தவர்

ஒரே போட்டியில் 673 ரன் எடுத்தவர்

13 அரை சதம் எடுத்தவர்

டெஸ்ட் போட்டி சாதனைகள்:

51 சதங்களை அடித்தவர்

6 முறை இரட்டைச் சதம் அடித்தவர்

20 முறை 150 ரன்களைக் கடந்தவர்

அதிக ( 182) போட்டிகளில் விளையாடியவர்

16 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர்

20 வயதாகும் முன்பே 5 சதம் அடித்தவர்

15 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்

11 ஆயிரம் ரன்களைக் கந்த முதல் இந்திய வீரர்

வெளிநாடுகளில் மட்டும் 8 ஆயிரம் ரன்களைக் குவித்தவர்

வெளிநாடுகளில் மட்டும் 29 சதங்களை அடித்தவர்

ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் என 6 முறை சாதித்தவர்

23வது வயதிலேயே இந்திய அணியின் கேப்டன் ஆனவர்.





மனதளவில் கடினம்: நூறாவது சதம் குறித்து சச்சின் கருத்து: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது நூறாவது சதத்தை அடித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு சச்சின் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தற்போது நான் எதையும் நினைக்கவில்லை. தற்போது எனக்கு கடினமான நிலையாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய போதும் சிறிதும் அதிர்ஷ்டமில்லாமல் இருந்தது. எத்தனை சதங்கள் எடுக்கப்பட்டது என்பது பற்றி நினைக்கவில்லை. அணிக்காக கடமையை மட்டும் செய்ய வேண்டும். நான் எந்தவித சாதனையை பற்றியும் நினைக்கவில்லை. எனது சாதனைகள் பற்றிய எதிர்பார்ப்பை மீடியாக்கள் ஏற்படுத்தின. ரெஸ்டாரண்ட், வீட்டுச்சேவை உள்ளிட்ட பல இடங்களுக்கு நான் சென்ற போதெல்லாம் அனைவரும் 100வது சதத்தை பற்றியே பேசினார்கள். இது எனக்கு மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இதற்கு முன்னர் எடுத்த 99 சதங்கள் பற்றி யாரும் பேசவில்லை என கூறினார்.

Leave a Reply