deepavali 2011

உலகமெங்கும் கொண்டாடும் தீபாவளி!



பூ மகள் பூவுலகம் வந்த நாள்!
ஆசியாவிலேயே மிக அதிக மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிதான். தீபாவளியைப் பற்றிய குறிப்புகள் கிறிஸ்து சகாப்த தொடக்கத்தில் எழுதப்பட்ட வாத்ஸ்யாயனரன் காமசூத்திரத்திலேயே காணப்படுகிறது. அந்த நூலின் யக்ஷ ராத்திரி என்று அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. யக்ஷ அதிபதியான குபேரனுக்கு நடத்தும் விழாவாக அக்காலத்தில் அது விளங்கி இருக்கிறது. இதையே இப்பொழுது வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையோடு சேர்த்து தன குபேர தேரஸ் எனக் கொண்டாடி வருகிறார்கள். விக்ரமாதித்யன் தீபாவளி தினத்துக்கு மறுநாள் தொடங்கியே விக்கரம சகாப்தத்தைத் தொடங்கினான். நம் நாட்டுக்கு வந்து போன முஸ்லீம் யாத்ரீகர் அல்பேருனியின் பிராயணக் குறிப்பிலும் தீபாவளி பற்றி ஒரு செய்தி காணப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று தீபாலங்காரம் செய்து மகாவீரருக்கு பூஜை நடத்தி வெகு விமர்சையாக ஜைனர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள். மகாவீரர் நிர்வாணம் எய்தியதும் காசி கோசலைப் பகுதியைச் சேர்ந்த பதினெட்டு மன்னர்களும் மலை லிச்சாவி பகுதியைச் சேர்ந்த இருபது மன்னர்களும் ஒன்று கூடி எங்கும் தீபாலங்காரம் செய்து பெரும் விழாவாகக் கொண்டாடியதாகவும் அன்று தொடங்கிய ஜைனர்கள் தீபாவளி உற்சவம் கொண்டாடி வருவதாகவம் ஜைன நூலான கல்ப சூத்ரம் ஹரி வம்ச புராணம் ஆகியவை கூறுகின்றன.
பாரத நாட்டில் லடாக் இமயமலைப் பிரதேசம் அஸ்ஸாம், மணிபூர், வங்காளம் ஆகிய பகுதிகளிலும்; இலங்கை, பர்மா, சயாம், கம்போடியா, இந்தோனேஷியா, சைனா, ஜப்பான், திபெத் ஆகிய வெளிநாடுகளிலும் பௌத்த மதத்தினர் மிகுதியாக வாழுகிறார்கள். அவர்கள் எல்லாம் தீபாவளி தினத்தன்று தீபாலங்காரம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். பகவான் புத்தர் நிர்வாணம் எய்தியது வைசாக பூர்ணிமையில் அல்ல, தீபாவளி தினத்தன்று தான் என்கிறார்கள், இவர்கள், புத்த மதத்தைத் தழுவிய அக்கால மன்னர்கள் சிராவஸ்தியிலிருந்து காசி வரை எங்கும் தீபாலங்காரம் செய்து புத்தரின் மகா நிர்வாணத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடினார்களாம். அதிலிருந்து பவுத்தர்கள் தீபாவளி விழா கொண்டாடி வருவதாக பவுத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன.
ஒவ்வொரு நாடுகளுமே... சொல்கிறதே- தீபாவளி
நேபாளத்தில்...
திஹார் என்ற பெயரில் ஐந்து நாள் கொண்டாடுகின்றனர். தீபாவளி முதல் நாள் காகங்களுக்கு தயிர் சாதம் வைப்பர். இரண்டாம் நாள் பைரவரான நாய்க்கு விருந்து வைப்பர். மூன்றாம் நாள் பசுக்களுக்கு பூஜை செய்வர். நான்காம் நாள் வீட்டுப் பிராணிகளுக்கு உணவு கொடுப்பர். ஐந்தாம் நாள் சகோதர- சகோதரிகள் நலனுக்கு பைலாதாஜ் என்ற பண்டிகை கொண்டாடுகின் றனர்.
இங்கிலாந்தில் கைபாகஸ் என்றும்; ஸ்வீடனில் லூசியா என்றும்; ஜப்பானில் டோராநாக்ஷி என்றும்; சீனாவில் தஹிம் ஹீபர் என்றும்; பர்மாவில் தாங் கீஜி என்றும் தீபாவளிப் பண்டிகையை வரிசையாய் தீபம் ஏற்றி கொண்டாடுவர்.
பர்மா, சீனா, சயாம் நாடுகளில் மூங்கிலில் வண்ணக் காகித அலங்காரம் செய்து அதில் தீபமேற்றி ஆடிப் பாடுவர். இது ஆகாய தீபம். கனடா நாடாளுமன்றத்தில் 1998-ல் தீபாவளி கொண்டாடினர். வண்ண விளக்கு அலங்காரத் துடன் மகாலட்சுமி பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கயானாவில் இந்துக்கள் வாழும் இடத்தில், சம்பிரதாயப்படி தீபாவளியைக் கொண்டாடு கின்றனர். அன்று அங்கு தேசிய விடுமுறை நாள்.
நேபாளத்தில் தீபாவளியை திகார் பண்டிகை என அழைக்கின்றனர்.
தாய்லாந்து நாட்டில் லாம் கிரி யோங் என்ற பெயரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
.
வங்காள மக்கள் தீபாவளியன்று காளி பூஜை செய்கின்றனர்.
ஜப்பானில் தீபாவளி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி, அமாவாசை, பிரதமை ஆகிய மூன்று நாட்களும் அவர்களுக்குத் திருவிழா நாட்களே.
சிங்கப்பூரில் தீபாவளியன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடைபெறும்.
மலேசியாவில் ஹரி தீபாவளி என்ற பெயரில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை தீபாவளியில் பங்கேற்ற முதல் அதிபர் ஒபாமா.
தீபாவளி பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட ஒரே நாடு சிங்கப்பூர்.
தீபாவளியைக் கொண்டாடும் உலகநாடுகள்; இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, சீனா, இங்கிலாந்து. முதன்முதலில் 1998-ல் கனடாநாட்டு பாராளுமன்றம் தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாடியது.
பர்மாவில் இப்பண்டிகையை தண்டிஜீ என்ற பெயரில், புத்தாடை அணிந்து வெடி வெடித்துக் கொண்டாடுகிறார்கள்.
ஜைன தீபாவளி
ஜைன மதகுரு மகாவீரர் முக்தியடைந்த தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுவர். உலகின் பேரொளியாகத் திகழ்ந்த அவர் மறைந்ததால், உலகில் சூழ்ந்த இருளைப் போக்க தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply